வெள்ளி, 28 அக்டோபர், 2011

சோழவந்தான் 18 வார்டு

1 வது வார்டு :   பேட்டை
                               பங்களாபட்டி வார்டு 1
                               பேட்டை அக்ரஹாரம் வார்டு 1
                               பேட்டை நடுத்தெரு வார்டு 1 
                                கள்ளர்தெரு வார்டு 1





2 வது வார்டு 
    வடகரைகண்மாய்தெரு வார்டு 2
    பேட்டை வடக்குத்தெரு வார்டு 2
    சந்தனமாரியம்மன் கோவில் தெரு வார்டு 2
    அரசன் சண்முகநாதபுரம் வார்டு 2
    ஆசாரிதெரு வார்டு 2



3 வது வார்டு  
         முதலியார்கோட்டை கிழக்கு தொகுதி வார்டு 3
          முதலியார்கோட்டை தெற்கு தெரு வார்டு 3
            முதலியார்கோட்டை நடுத் தெரு வார்டு 3
         முதலியார்கோட்டை மேலத்தெரு வார்டு 3
         முதலியார் கோட்டை வடக்குத்தெரு வார்டு 3
          நீர்ரோடு வார்டு 3
            நாவிதர்தெரு வார்டு 3



4 வது வார்டு  
       சங்கங்கோட்டை வார்டு 4
    சங்கங்கோட்டை கிணற்றுத்தெரு வார்டு 4
    இருளப்பகோவில்தெரு வார்டு 4
    சித்தடித்தெரு வார்டு 4
    ரயில்வேபீடர் ரோடு வார்டு 4



5 வது வார்டு  
  ஆலங்கொட்டாரம் வார்டு 5
  நகரிரோடு வார்டு 5
  வாடிப்பட்டி ரோடு வார்டு 5




6 வது வார்டு  
   வைத்தியநாதபுரம் வார்டு 6
   மார்க்கெட் பீடர் ரோடு வார்டு 6



7 வது வார்டு  
----------------------------
-------------------------
-------------------------




8 வது வார்டு  
   வீரணநாயக்கர்தெரு வார்டு 8
 திரௌபதி அம்மன் வடக்கு கோவில் தெரு வார்டு 8
வளையல்காரதெரு வார்டு 8
 ஆசாரிமார்குறுக்குத்தெரு வார்டு 8



9 வது வார்டு  
இரட்டை அக்ராஹாரம் வார்டு 9
ஒற்றை அக்ரஹாரம் வார்டு 9
ரயில்வேபீடர் ரோடு வார்டு 9


10 வது வார்டு
  பொய்கை விநாயகர் கோவில் தெரு வார்டு 10
வாணிபசெட்டியார் தெரு வார்டு 10
மேலரதவீதி வார்டு 10
பிரளயநாத சுவாமி சன்னதி தெரு வார்டு 10
பூமேட்டு தெரு வார்டு 10
போலிஸ்லையன் தெரு வார்டு 10
சிவன்கோவில் தெரு வார்டு 10



11 வது வார்டு  
மாரியம்மன்கோவில் தெரு வார்டு 11
சௌந்திரலிங்கம்பிள்ளை சந்து வார்டு 11
பெரிய நாயகம்பிள்ளை சந்து வார்டு 11
கிண்ணிமடத்தெரு வார்டு 11
கிராய்வெட்டிதெரு வார்டு 11
46ம்நம்பர் ரோடு வார்டு 11


12 வது வார்டு  
தெற்கு ரத வீதி வார்டு 12
ரவுத் நாயக்கர் தெரு வார்டு 12
மார்க்கெட் வீதி வார்டு 12
மாரியம்மன் கோவில் தெரு வார்டு 12

13 வது வார்டு  
வேளாளர் தெரு வார்டு 13
சுப்ரமணியசுவாமிகோவில்தெரு வார்டு 13
நாடார்புதுத்தெரு வார்டு 13
முகமதியர்தெரு வார்டு 13
பள்ளிவாசல்தெரு வார்டு 13

14 வது வார்டு  
46நிர்ரோடு வார்டு 14
நாடார் புதுதெரு வார்டு 14
சப்பாணிகோவில்தெரு வார்டு 14
பள்ளிவாசல்தெரு வார்டு 14
கோரமியான்பேட்டை வார்டு 14

15 வது வார்டு  
அய்யவார்தெரு வார்டு 15
தெலுங்கு செட்டியார் தெரு வார்டு 15
தெற்குரத வீதி வார்டு 15


16  வது வார்டு  
கோட்டைமேடு ஆற்றுப்பாதை வார்டு 16
தெற்கு எல்லைபுதுத்தெரு வார்டு 16
மாணிக்கம்பிள்ளை தெரு வார்டு 16
வண்ணார் தெரு வார்டு 16

17 வது வார்டு  
 ஒட்டுப்பச்சேரி வார்டு 17
மேலப்பச்சேரி வார்டு 17

18 வது வார்டு  

கச்சிராயிருப்பு பாதை வார்டு 18
நாடார் முகுந்தமார் சாவடி தெரு வார்டு 18
கீழப்பச்சேரி வார்டு 18
கீழப்பச்சேரி தெரு










பெரிய கண்மாய்

தண்ணீர் கடலில் சேரும் நதிக்கரை பகுதியில் கடல் மீன்வளம் அதிகம் கிடைக்கிறது. குளிர்ச்சியான தண்ணீர் வரும் பாதையை நோக்கி, கடல் மீன்கள் வருகின்றன. அப்போது பறவைகளுக்கு அதிக கொண்டாட்டம் தான். மதுரையில் 700 ஏக்கர் ஏக்கர் பரப்பளவு கொண்ட வண்டியூர் கண்மாயிலும், 950 ஏக்கரில் உள்ள சோழவந்தான் வடகரை கண்மாய் பகுதிகளிலும் வெளிநாட்டு பறவைகள் வருகின்றன.  இப்பறவைகளின் எச்சங்கள் நம் மண் வளத்தை பெருக்குகிறது.  வெண் கொக்கு, லக்கா, அரிவாள்மூக்கன், நத்தைகுத்தி நாரை, நீர்காகம், மஞ்சள்மூக்கு நாரை, கூழைக்கடா இனங்களுடன், இணக்கமாக இப்பறவைகள் வாழ்கிறது.
சோழவந்தான் விளைந்தால் தென் தமிழ் நாடு முழுவதுக்கும் போதும் உணவுக்கு
தமிழகத்தின் இரணடவது மிகபெரிய கண்மாய் இன்குதான் உள்ளது.
முதல் மிகபெரிய கண்மாய் இராமநாதபுரம் கண்மாய் ஆகும்.
வெற்றிலை,வாழை,கரும்பு,தென்னை இந்த பகுதியில் நன்கு விளைகிறதுவெற்றிலை மும்பாய்க்கும்,கொல்கட்டவுக்கும். வாழை பெங்களுருக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது




தென்கரை கண்மாய்

 சோழவந்தான் அருகே தென்கரை கண்மாய் உள்ளது. 600 ஏக்கர் நில பரப்பளவுள்ள இக்கண்மாயில் 3 வது தலைவெட்டியான் மடை உள்ளது. இம்மடை மூலம் முள்ளிப் பள்ளம் பகுதியில் உள்ள 300 க்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. நெல்,வாழை, வெற்றிலை கொடிக்கால் போன்றவைகள் பயிரிடப்பட்டுள்ளன.

VRNSPV


Cell :9943328224 , 9043343322
Email : VRNSPV@gmail.com

                        

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

சோழவந்தான் SHOLAVANDAN




வைகை ஆறு(sholavandan vaigai aaru)




கோவில்






College




காவல்

 
   சோழவந்தான். காவல் நிலையம்

கோவில் ( KOVIL )



--------------------------------------------------------------------------------------------------------

ஜெனகைமாரியம்மன்திருக்கோயில்.

வரலாறு : ரேணுகாதேவி ஜமதக்கினி முனிவரை மணம் முடித்து பரசுராமரை பெற்றெடுக்கிறாள். கணவரின் பூஜைக்கு கமண்டல நதியில் நீர் முகந்திடும்போது வானவீதியில் சென்ற கந்தர்வன சா‌யையை நீரில‌ே கண்டு அவன் அழகில் மயங்கி ஆச்சர்யப்பட்டதால் மண்குடம் உடைந்து நீர் உடம்பெல்லாம் நனைந்ததை முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபம் கொண்டார்.

மகன் பரசுராமரை அழைத்து தாயின் தலையை வெட்டிக் ‌கொண்டு வரும் படி கூற அவ்வாறே அன்னையின் தலையை பரசுராமர் கொண்டுவந்தார். இருப்பினும் பெற்ற தாயை வெட்டிய கையை வெட்டி விட்டேன் என்று கூற முனிவரும் வரம் கேள் தருகிறேன் என்று பரசுராமரிடம் கூறினார். தன் தாயை உயிர்ப்பித்து கொடுக்கும்படி ‌‌கேட்டார். முனிவர் கமண்டல நீரை மந்திரம் ஓதி தந்தார். அதைபெற்றுக் கொண்டு வெட்டுப்பட்டுக் கிடக்கும் தன் தாய் சடலம் அருகே சென்று தவறுதலாக தாயின் தலையை வேறொரு பெண்ணின் உடம்போடு ஒட்ட வைத்து தண்ணீரை தெளி்க்க உயிர் பெற்றார். அதனால் அந்த உயிர் அரக்கி ஆகின்றது. அதன் ஆக்ரோஷம் அதிகமாகிறது.

அதன் ஆக்ரோஷம் அடங்கும் பொருட்டு இத்தலத்தில் அமைதிவடிமாக மாரி எழுந்தருளிஅருள்பாலிக்கிறாள். இன்னமும் கர்ப்பகிரகத்தில் அம்மனுக்கு பின்புறம் சந்தனமாரி எனும் நின்ற நிலையிலான ஆக்ரோஷ ரேணுகாதேவி காட்சி தருகிறாள்.

திருவிழா : வைகாசி பெருந்திருவிழா - 17 நாட்கள் - கொடி ஏற்றம் - சிங்கவாகனத்தில் புறப்பாடு - 8ம் நாள் தீச்சட்டி - 9ம் நாள் பால்குடம் பூப்பல்லக்கு அன்று இரவு புஷ்பபல்லக்கில் அ‌லங்கார வீதியுலா பூக்குழி இறங்குதல் தை மாத பிறப்பு, சித்திரை வருட பிறப்பு, நவராத்திரி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகள் அம்மனுக்கு நடைபெறும். வருடத்தின் விசேச நாட்களான பொங்கல் தீபாவளி பண்டிகைகளின் ‌போதும் ‌கோயிலில் பெரிய அளவில் பக்தர்கள் வருகை இருக்கும். விஜய தசமி அன்று வைகை ஆற்றில் அம்பு போடுதல் திருவிழா மிகவும் விசேசமாக இருக்கும். அந்த விழாவின் முடிவில் மழை தூரல் விழுவது இன்றும் நடக்கும் அதிசயமான உண்மை.
சிறப்பு : இங்கு அம்மன் 2 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
பொது தகவல் : அழகிய பசுமை வனம் போன்ற சோழவந்தான் பகுதியின்‌ வைகை ஆற்றின் அருகில் அமைந்துள்ள ஆலயம்.
பிரார்த்தனை : அம்மை போட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு குணமடைவது இப்பகுதியில் மிகவும் பிரபலம்.

குழந்தை பாக்கியம், திருமண வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.

விவசாய செழிப்பு, தொழில் விருத்தி, கல்வி மேம்படுதல் போன்ற பிரார்த்தனைகளும் இத்தலத்தில் நிறைவேறுகின்றன.

கை கால் ஊனம், மற்ற உடல் குறைபாடுகள், பிணி பீடை ஆகியன விலகவும் இத்தலத்து அம்மனை வணங்கினால் தீர்வு கிடைக்கிறது.


நேர்த்திக்கடன் : சிலை எடுப்பு : உருவம் செய்து தொட்டில் கட்டி நேர்த்திகடன் செய்வது. குழந்தை வரம் கிடைக்கப் பெற்றவர்கள் கரும்புத் தொட்டில் கட்டி குழந்தையை எடுத்து கோயிலை சுற்றி வருகின்றனர். விவசாயம் செழிப்படைய ‌வேண்டிக் ‌கொண்டவர்கள் தானியங்களை ‌கொண்டு வந்து கொட்டி அம்மனுக்கு காணிக்கை செய்கின்றனர். தீச்சட்டி, அலகு எடுத்தல் (முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தல்) பூக்குழி இறங்குதல், பொங்கல் வைத்தல், முத்துச் சொரிதல் ( ஆமணக்கு விதைகளை போடுதல்) முடி காணிக்கை, ஆடு மாடு சேவல்களை காணிக்கை செலுத்தல். ஆயிரம் கண் பானை செலுத்தல், சிலை காணிக்கை, பரிவட்டம் சாற்றுதல், மாவிளக்கு காணிக்கை ஆகியனவும் இத்தலத்தின் புகழ் பெற்ற நேர்த்தி கடன்களாகும். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
தல சிறப்பு : அம்மை நோய் தீருதல் : அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈரத்துணியோடு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டிக் கொண்டு அர்ச்சகர் தரும் அம்பாள் தீர்த்தம் வாங்கி குடிக்க வேண்டும். இது மஞ்சள் வேப்பிலை மற்றும் வேறு சில பொருட்களும் கலந்த மருத்துவ குணமும் அம்பாள் கருணையும் கலந்த அபூர்வ தீர்த்தம் ஆகும்.


தல பெருமைகள் : பசுமை மிகுந்த சோழவந்தான் நகரை சுற்றியுள்ள 48 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மிக சிறப்பாக தங்கள் குல தெய்வமாக போற்றி வணங்கும் சக்தி வாய்ந்த மாரி வீற்றிருக்கும் சிறப்பு மிகுந்த தலம். எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவகோயில் இது.

வைகை என்னும் புண்ணிய நதியின் கீழ்கரையில் சதுர்வேதிபுரம், அனந்தசாகரம், ஜனகையம்பதி என்றெல்லாம் போற்றப்படும் கோயில்.

அனைத்து ஜீவ ராசிகளையும் பரிபாலனம் செய்ய உலகில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐங்கீர்த்தியங்களையும் செய்து பிறவிப்பெரும் பயனை அடைய வைக்கும் ஆலயம்.


முகவரி : அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், சோழவந்தான்- 625 214, மதுரை மாவட்டம்.

--------------------------------------------------------------------------------------------------------



சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் திருக்கோயில்.

திருவிழா : சித்திரை - சித்ரா பவுர்ணமி - 3 நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும, - ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். தசாவதாரத்தில் 9 அவதாரங்கள் எடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். புஷ்ப பல்லக்கில் அலங்கரித்து சுவாமி வலம் பங்குனி பிரம்மோற்சவம் - 11 நாட்கள் - ஸ்ரீ ராம நவமி, மற்றும் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறும். தினமும் சுவாமி பள்ளியறை புறப்பாடு நடக்கும். தைமாதப்பிறப்பு, நவராத்திரி, வைகுண்ட ஏகாதேசி (சொர்க்க வாசல் திறப்பு) நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். நவராத்திரி, ஆடிப்பூரம், ஆண்டாள் திருநட்சத்திரத்தில் விசேசமாக இருக்கும்.

சிறப்பு : ஸ்ரீமன் நாராயணனே மாப்பிள்ளையாக வேண்டி ஜனகன் தவம் இருந்ததற்கு நினைவுச் சின்னமாக விளங்கும் தலம்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : அழகிய பசுமை வனம் போன்ற சோழவந்தான் பகுதியில் வைகை ஆற்றின் அருகில் அமைந்துள்ள ஆலயம். அழகிய ஆஞ்சநேயர் தனி சந்நிதியாக வீற்றிருக்கும் தலம். இங்கு ஆண்டாள் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார்.
பிரார்த்தனை : கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியன இத்தலத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த பிரார்த்தனைகள் ஆகும்.விவசாய விளைச்சல் செழிக்க இத்தலத்தில் பலர் வேண்டிக் கொள்வர்.

இத்தலத்து பெருமாளை வேண்டிக் கொண்டால் தொழில் வளம், கல்வி விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியன நி‌றைவேறுகின்றன.

நேர்த்திக்கடன் : கோட்டை நெல் தருதல் இத்தலத்தின் சிறப்பு வாய்ந்த நேர்த்திகடனாகும். இத்தலத்து வரும் ஏராளமான பக்தர்கள் ஜெய வீர ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்துகின்றனர். பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தல், துளசிமாலை சாத்துதல், நெய் தீபம் ஏற்றுதல், மாலை சாற்றி வழிபடுதல் ஆகியனவும் இத்தலத்தில் உள்ள பெருமாளுக்கு பக்தர்கள் செய்கின்றனர். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
தல சிறப்பு : இத்தலத்தின் மிகவும் விசேசம் இங்கு அருள் பாலிக்கும் ‌ஜெயவீர ஆஞ்சநேயர் ஆவார். அர்த்தமண்டபத்தின் வலதுபக்கம் தனி சந்நிதியாக வீற்றிருக்கும் இ‌வரை வணங்கினால் நினைத்த காரியத்தை நிறை‌வேற்றித் தருவார். என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த ஆஞ்சநேயரின் வால் பின்புறம் சுற்றி நூனியில் மணி கட்டியிருக்கும் அழகு பார்ப்பவரை மயங்க வைக்கும். இந்த ஆஞ்சநேயரை வணங்கி விட்டு எந்த காரியத்தை தொட்டலும் ‌ஜெயம் ஆகும் என்பதால் இவர் ஜெயவீர ஆஞ்சநேயர் என்ற பெயர் விளங்குகிறார். மேலும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இந்த ஆஞ்சநேயரை பெருமளவிலான பக்தர்கள் வடைமாலை சாத்தி வழிபடுகிறார்கள்.

பெரிய அளவிலான ராமன் சீதை லட்சுமணன் ஆகியோரது வார்ப்பு விக்ரகம் உள்ளது இக்கோயிலில். புராதன காலத்தில் இருந்தே இருக்கும் கோயில். வைகை என்னும் புண்ணிய நதியின் கீழ்கரையில் ஜனகையம்பதி என்று அழைக்கப்படும் இடத்தில் அ‌மைந்துள்ள அழகிய ‌கோயில். இங்குள்ள ராமனது விக்ரகம் மிக அழகிய வடிவில் மிக நேர்த்தியாக வகையில் அமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பு.



முகவரி : அருள்மிகு ஜெனகை நாராயணபெருமாள் திருக்கோயில் சோழவந்தான் - 625214 மதுரை மாவட்டம்.




--------------------------------------------------------------------------------------------------------


அருள்மிகு பிரளயநாதசுவாமி திருக்கோயில்

வரலாறு : சில நூற்றாண்டுகளுக்கு முன் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் ஒருவர், காசியிலிருந்து ஒரு லிங்கம் கொண்டுவந்து, வைகை ஆற்றின் கரையில் பிரதிஷ்டை செய்து வணங்கினார்.

ஒருசமயம் ஆற்றில் உலகம் அழியும் காலத்தில் (பிரளயம்) ஏற்படுவது போல கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பயந்த மக்கள் சிவனை பிரார்த்தனை செய்தனர். சிவன் இரக்கம் கொண்டு வெள்ளத்தை நிறுத்தினார். பிரளயத்தில் காத்தருளியவர் என்பதால் இவர், "பிரளயநாதர்' என்று பெயர் பெற்றார்.


திருவிழா : பிரதோஷம், சிவராத்திரி, கார்த்திகை சோமவாரம், நவராத்திரி, கந்தசஷ்டி போன்ற திருவிழாக்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
சிறப்பு : செவ்வாய் தோஷம்உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல்11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : சுவாமி, அம்பாளுக்கென தனித்தனி சன்னதிகள் உள்ளன. அவ்விரு சன்னதிகளுக்கு நேரே நந்திகள் உள்ளன. மூலவர் பிரளயநாதராகவும், அம்பாள் பிரளயநாயகியாகவும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். சுவாமி சன்னதி கோஷ்டத்தின் வலப்பக்கம் தெற்கு நோக்கி தெட்சிணாமூர்த்தியும், சுவாமிக்கு பின்புறம் மேற்கு நோக்கி வலம்புரி விநாயகரும், வள்ளி, தெய்வானையுடன் முருகனும், அனுமன், லட்சுமி ஆகியோர் தனி சன்னதிகளிலும் , சுவாமிக்கு இடப்புறத்தில் விஷ்ணுதுர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். சுவாமி சன்னதி எதிரே நவக்கிரகம் மற்றும் பைரவர் சன்னதிகள் உள்ளன.

இத்தல விநாயகர் பாலகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனுக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.

பிரார்த்தனை : இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபட இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

சுவாமிக்கு இடதுபுறத்தில் எட்டு கரங்களுடன் அருள்பாலிக்கும் விஷ்ணு துர்கைக்கு செவ்வாய்கிழமை தோறும் ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி செவ்வரளி பூவால் அர்ச்சனை செய்தால் திருமணத் தடை மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவை நிர்வத்தியாகும் என்பது ஐதீகம்.


நேர்த்திக்கடன் : சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல சிறப்பு : வில்வ தீபம்: இங்குள்ள முருகப்பெருமான் மிகவும் விசேஷமானவர். கந்த சஷ்டியின்போது, ஆறு நாட்களும் சிறப்பு பூஜை நடக்கும். சஷ்டிக்கு மறுநாள் (ஏழாம் நாள்) 40 படி அரிசியில் தயிர் சாதம் செய்து "திருப்பாவாடை தரிசனம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இங்குள்ள பைரவரும் விசேஷமானவர்.

இவருக்கு இத்தலத்து விருட்சமான வில்வத்தின் காயை உடைத்து, அதன் ஓடுகளில் நெய் விட்டு தீபம் ஏற்றுகின்றனர். இதன் மூலம் நம் பக்கம் நியாயமிருக்கும் வழக்குகளில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையும், பாதுகாப்பான வாழ்வைப் பெறலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

சுவாமிக்கு பின்புறம் மேற்கு நோக்கியுள்ள ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வெண்ணெய் சாற்றி, மறுநாள் அந்த வெண்ணெயை பிரசாதமாக வாங்கி அருந்தினால் தீராத வியாதியும் குணமடையும் என்பது நம்பிக்கை.



முகவரி : அருள்மிகு பிரளயநாதசுவாமி திருக்கோயில், சோழவந்தான்- 625215. மதுரை மாவட்டம்.

--------------------------------------------------------------------------------------------------------

சோழவந்தான் திருமூலநாத சுவாமி

வரலாறு : நூற்றாண்டுகளுக்கு முன்பு, மக்கள் இறை பக்தியில் நாட்டம் இல்லாது இருந்தபோது, அவர்களை இறை பக்தியில் ஈடுபடுத்திட வேண்டுமென ஈசனும் உமையாளும் முடிவெடுத்தனர். அதன்படி மக்களிடம் இறை உணர்வினை ஏற்படுத்திட யாரை அனுப்புவது என நந்திகேஸ்வரரிடம் கேட்டபோது சுந்தரரை அனுப்பும் படி அவர் கூறினார். அதன் படி சுந்தரர் பூமிக்கு வர ஒரிடத்தில் மாடு மேய்ப்பவன் ஒருவன் இறந்து கிடக்க அவனைக் சுற்றி மாடுகள் அழுது கொண்டிருந்த காட்சியைக் கண்டு மனம் இறங்கி அவனது உடலில் புகுந்து மாற்று உரு பெற்றார். அவனது உருவிலேயே வீட்டிற்கு சென்ற அவர் வந்த காரியம் நிறைவேற்றாது இருந்தார். இ‌தனைக் கண்ட ஈசன் சுந்தரரின் வேலையினை உணர்த்த முனிவர் வேடத்தில் சென்று அவரிடம் யாசகம் கேட்டார்.

சுந்தரர் உணவு ‌கொண்டு வர, அங்கு முனிவர் வேடத்தில் இருந்த ஈசனைக் காணாததைக் கண்டு கலங்கினார். அப்‌போது அங்கே தரையில் கால் தடம் இருந்ததைக் கண்டு அதனைப் பின் த‌ொடர்ந்தார். அத்தடம் நேரே சிதம்பரம் சென்றடைய, அங்கே சிவனே முனிவர் வடிவில் வந்ததை உணர்த்தி இன்று தலம் வீற்றிருக்கும் தென்கரை பகுதியில் திருமூலநாதர் அசரீரி ஒலித்தது.

அதன் பின் இப்பகுதியில் திருமூலநாதர் எனும் பெயரிலேயே சிவாலயம் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.


திருவிழா : இங்கு மாத பூஜைகளுடன், புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆடி கார்த்திகை, ஆடி பூரம், ஆவணி மூலம், நவராத்திரி, கந்த சஷ்டி, கார்த்திகை, திருவாதிரை, சிவராத்திரி மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் சிறப்பா‌க ‌கொண்டாடப்படுகின்றன.
சிறப்பு : முகப்பில் அதிகார நந்தி நின்ற கோலத்தில் துணைவியாருடன் காட்சி தருகிறார்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். திருவிழா நாட்களில் அதிகாலையிலேயும் நடை திறக்கப்படுகிறது.
பொது தகவல் : இத்தலத்தில் விநாயகர் கோட்டை விநாயகர் அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் சதுர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்

பிரார்த்தனை : இத்தலத்தில் உள்ள திருமூலநாதர் அகிலாண்டேஸ்வரி அம்பாளை வணங்கிட, குழந்தைப் பேறு கிட்டும், தீராத நோய்களும், குஷ்ட நோய்களும் தீரும். கல்யாண முருகனை வேண்டி வர திருமணத்தடை நீங்கும், துர்க்கையை அபிஷேகம் செய்து துதித்திட நோய்கள் விலகும், சுரதேவரை அபிஷேகம் செய்து வணங்க தீராத காய்ச்சல் தீரும் என்பதும்,பைரவரை வணங்கி வர கண் திருஷ்டி நீங்கும், ‌கோட்டை விநாயகரை வணங்கிட எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை. நேர்த்திக்கடன் : எண்ணிய காரியங்கள் நிறைவேறினால், திருமூலநாதர் அகிலாண்டேஸ்வரிக்கு அபிஷேகங்கள் செய்து, தொட்டில் கட்டி, வளையல்கள் அணிவிக்கப்படுகிறது. கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணமும், சுரதேவருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து மிளகு பத்து இட்டு, மிளகு, சீரகத்தை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. தல சிறப்பு : சிவ பெருமான், மூலநாதராக வீற்றுள்ள இத்தலத்தில் தனியாக உள்ள அகிலாண்டேஸ்வரி சந்நிதியின் எதிரே சுவர்ண புஷ்பகரிணி எனும் தீர்த்த குளம் உள்ளது. இதன் கரையில் அம்பாள் அகி‌லாண்டேஸ்வரி தவம் புரிந்து சிவன‌ை மணம் புரிந்ததாக வரலாறு கூறகிறது.
குஷ்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்த மன்னன் வீரபாண்டியன் இக்குளத்தில் நீராடி தன் நோயினைத் தீர்த்துக் கொண்டதாகவும், அதன் பின் கோயிலை அவன் சீரமைத்ததாகவும் கூறப்படுகிறது. இக்குளத்தி்ல் நீராடினால் தீராத நோய்கள் தீர்வதாகவும், இந்த நீரினை தொடர்ந்து 48 நாட்கள் விரதமிருந்து ஒரிடத்தில் ஊற்றி வர அவ்விடத்தில் வில்வ மரம் முளைக்கும் எனவும், நி‌னைத்த காரியங்கள் நிறைவேறும் எனவும் இன்று வரையிலும் நம்பப்படுகிறது. சிவன் முதன் முதலாக காட்சி தந்த தலமென்பதால், ஆதி சிதம்பரம் என்ற பெயரினைப் பெற்ற தலம் என தல புராணம் கூறுகிறது. அகத்தியர் பொதிகை மலை சென்ற போது மூலநாதரால் உபதேசம் பெற்ற தலம். இத்தலத்தில் புலி சாபம் பெற்ற கந்தர்வன், சாப விமோசனம் பெற்றான். காசிக்கு சென்றால் முக்தி என்பது போல இத்தலத்திற்கு சென்றாலும் முக்தி அடையலாம் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் மூலவராக சிவன், ஜலதாரையின் மேல் பிரம்மா, கன்னி மூலையில் விஷ்ணு என மும்மூர்த்திகளும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளனர். ஜனகாதி முனிவர்கள் முக்தி பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று.


முகவரி : ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத திருமூலநாத சுவாமி திருக்கோயில், சோழவந்தான் - மதுரை மாவட்டம்.





--------------------------------------------------------------------------------------------------------


சோழவந்தான் சனீஸ்வர பகவான்

வரலாறு : பல ஆண்டுகளுக்கு முன்பு சோழவந்தானிலுள்ள ஆஞ்சநேயர் மற்றும் சித்திவிநாயகர் கோயிலுக்கு புத்தம்புது மலர்கள் பறிப்பதற்காக அமைக்க ஒரு நந்தவனம் அமைக்கப்பட்டது. இந்த தோட்டத்தில் பாரிஜாதம், நாகலிங்கம், மாவலிங்க பூ மரங்களும், மூலிகை குணம் கொண்ட செடிகளும் வளர்க்கப்பட்டன. அக்ரஹார மக்கள் இந்த நந்தவனத்தை பராமரித்து வந்தனர். காலப்போக்கில் இந்த நந்தவனம் பராமரிப்பு இன்றி முட்புதர்கள் அடர்ந்து விஷஜந்துக்கள் வசிக்கும் இடமாக மாறி விட்டது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் பயத்தில் ஆழ்ந்தனர். 40 ஆண்டுகளுக்க முன்பு, இந்த இடத்தை பக்தர்கள் மீண்டும் சுத்தப்படுத்தினர். மாவலிங்க மரத்தடியில் இளைஞர் ஒருவர் புற்களை அகற்ற மண்வெட்டியால் தோண்டிய போது ஏதோ தென்பட்டது. மூன்றடி ஆழத்திற்கு தோண்டியதும், காக வாகனத்துடன், நின்ற கோலத்தில் சனீஸ்வரபகவான் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இவரை தரிசிக்க வந்தனர்.

சிருங்கேரி மற்றும் காஞ்சி சுவாமிகளின் அருளாசியுடன் சுயம்பு சிலையை நிறுத்தி பீடம் அமைத்து கோயில் கட்டடம் கட்ட அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மக்கள் விரும்பினர். 1975ல் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை,மாலையில் சனீஸ்வரபகவானுக்கு பூஜைகள் நடந்து வருகிறது.

திருவிழா : சனிப்பெயர்ச்சி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது தவிர சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
சிறப்பு : இங்கு சனீஸ்வர பகவான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : சனி பகவானுக்காக அமைந்துள்ள தனிக்கோயில்களில் இதுவும் ஒன்று.

பிரார்த்தனை : விருச்சிக ராசிக்காரர்களின் பரிகார ÷க்ஷத்திரமாக இது விளங்குகிறது. சுயம்பு சனீஸ்வரரை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிட்டும். சனிதிசை, ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனியால் பூமி, செல்வத்தை இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இத்தலத்தில் பூஜை செய்தால் இழந்ததை அனைத்தும் பெறுவர் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன் : சனிக்கிழமைகளில் நெய்,எள் விளக்கேற்றுதல், எள்சாதம், அன்னதானம் வழங்குதல் ஆகியவற்றால் சனிதோஷம் நீங்கப் பெறலாம்.
தல சிறப்பு : மாவலிங்மரத் தடியில் சுயம்புவாக தோன்றியதால் இதுவே ஸ்தல விருட்சமாயிற்று. விருச்சிக ராசிக்காரர்களின் பரிகார ÷க்ஷத்திரமாக இது விளங்குகிறது. சுயம்பு சனீஸ்வரரை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிட்டும். சனிதிசை, ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனியால் பூமி, செல்வத்தை இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இத்தலத்தில் பூஜை செய்தால் இழந்ததை அனைத்தும் பெறுவர் என்பது நம்பிக்கை. சனிக்கிழமைகளில் நெய்,எள் விளக்கேற்றுதல், எள்சாதம், அன்னதானம் வழங்குதல் ஆகியவற்றால் சனிதோஷம் நீங்கப் பெறலாம்.
முகவரி : அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், சோழவந்தான்-625214, மதுரை மாவட்டம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


வைகை ஆறு






கல்லூரி

                              விவேகானந்தா கல்லூரி


Vivekananda College, Thiruvedagam West,        Sholavandan, Madurai



சோழவந்தான் ( Sholavandan )

சோழவந்தான் பேருந்து நிலையம்

ஆட்டோ மற்றும் கார் ஸ்டான்ட்
பேருந்து நிலையம் மற்றும் மந்தைகளம்




பேருந்து நிலையம்உள்புறம்

அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் திருக்கோவில்

முந்தய சந்தை
தேவர் சிலை