இதை
ஒரு நிதானமற்ற பொழுதின்
கை நடுக்கங்களுக்கிடையே
இலக்கில்லாமல் கிறுக்க ஆரம்பித்திருக்கிறேன்..
சத்தமில்லாமல்
புகைந்து கொண்டிருக்கிறது
இந்த ஆழ்ந்த பனி இரவின்
தெரு விளக்கு வெளிச்சம்..
இறந்த காலத்தின் வலிகளிலொன்று
மூளையின் எங்கோ ஓர் மூலையில்
உயிர்பெற்று
நெஞ்சத்தினூடே வழிந்து
பின் வார்த்தைகளாய்
உருமாற தெரியாமல் உதிர்கிறது..
இதோடு
இந்த கிறுக்கலும் நின்று போகிறது..
நாளைய இரவிலும்
என் உளறலை தொடர கூடும் என்ற அவசியமற்ற தகவலோடு
இப்போது வலுக்கட்டயாமாய்
தூக்கத்தை போர்த்திகொள்ள போகிறேன்..
குட் நைட்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக