பல்லிகள் நம் வீட்டுச்சுவர்களில் தலைகீழாக நடக்கும். தரையிலும் தனது பூச்சி உள்ளிட்ட இரைகளை துரத்திப் போய் பிடிக்கும். ஆனால் இதே பல்லிகள் தண்ணீரைக் கண்டால் மட்டும் கப்சிப்பாகி விடும்.
ஆனால் ஒருவகைப் பல்லிகள் தண்ணிரிலும் சர்வ சாதாரணமாக நடந்து பயணிக்கின்றன.இந்த பல்லியின் நீளம் ரெயில் பெட்டி மாதிரி கொஞ்சம் நீளம். (சுமார் 2 அடி) ஒல்லியான இதன் உடல் வாகும் இது தண்ணீரில் பாய்ந்து செல்ல உதவுகிறது.
எதிரிகளிடம் இருந்து தப்பிக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது இந்த பல்லிகள் தண்ணிரில் வேகவேகமாக நடப்பதை வழக்கத்தில் வைத்திருக்கின்றன.
இந்தப் பல்லி தண்ணிரில் நடக்கும் ரகசியம், இதன் அகன்ற பின்புற கால்கள். ஒவ்வொரு விரலுக்கும் இடையில் உள்ள ஜவ்வு தண்ணீரில் நேராக நடக்க உதவுகிறது. அப்படி தண்ணீரில் இவ்வகைப் பல்லிகள் நடக்கும்போது தன் பின்னங்கால்களையே பயன் படுத்துகிறது.
மத்திய அமெரிக்காவில் தண்ணீர் கரையோரங்களில், ஏரிகளில், கால்வாய்களில் இந்த பல்லிகள் தண்ணீரில் நடப்பதை முதன்முதலாக பார்ப்பவர்கள் பிரமித்துப் போவார்கள்.
பூச்சிகள், பழங்கள், சிலவகை இலை தழைகள் இந்த பல்லிகளின் விருப்ப உணவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக